கருப்பன்
இஞ்சி மோறப்பா
போல முரட்டு மீசை...
கொஞ்சி பேச நீ
குழந்த போல..
பனங்காய போல உன்
முரட்டு நெஞ்சு...
கோலந்தா நானும் போட
இலவம் பஞ்சு...
திருப்பாச்சி அருவா போல
முறைக்கும் பார்வ...
என் கண்ணப்பாத்தே நீயும்
கிறங்கி கிடப்ப...
எலந்த மரத்தப்போல
வலிந்த தோளு...
என் பல்லிடுக்கில் நீயும்
கரும்பா இனிப்ப...
என் முந்தானை
சிறைக்குள்ள மாட்டிக்கிட்ட
சிங்கம் நீ...
என் கன்னகுழியில
விழுந்துபுட்ட ...!
வாரி உன்ன நானும்
அணைச்சுக்கிட்டேன்...
கருமேக்கூந்தலில்
சிக்கி கிட்ட
மழைசாரல் நீ...
எந்தாகம் தீர்க்க
உனை பருகிகிட்ட
பூமி நான்...
வருசகணக்கில்
உன்ன
தேடி நானும் நெருஞ்சி
காட்டுக்குள்ள தொலஞ்சே
போனேன்...
வாகாக வந்து என்ன
அள்ளிகிட்ட....!
என் நெஞ்சுகூட்டுகுள்ள
கூற போட்டுகிட்ட!!
உன் ஆச கதவ இழுத்து நா
மாறாப்ப போட்டுகிட்டேன....
ஏன் கருவாப்பயா உன்ன
செவக்க வைக்கதானே
வெத்தலையா என்ன நா
கொடுத்தேன்..
பொன்னாங்கன்னிய
தின்னுகிடந்தவ
இவள தின்னு தீர்க்கவே
வந்துபுட்ட...
நீ கிள்ளி எடுக்கவும்
நா அள்ளிக்கொடுக்கவும்
ஜாமத்தில் மாரி மழை
நெஞ்ச நெனைக்குதே...!!!!
Comments
Post a Comment