பருவமழை
சடசடவென அடித்து
கொண்டிருக்கிறது....
உன் முத்தங்களை
நினைவுபடுத்தி...
சட்டென வேகம்
குறைகிறது...
உன் மூச்செடுப்புகளை
முன்னிருத்தி..
மெலிதாய் இசைத்தாடுகிறது.
உன் வெட்க்கசிவுகளை
நினைவூட்டி....
நிற்கவா கடக்கவாவென
மாயம் செய்கிறது..
உன் மாயப்புன்னகையை
மையப்படுத்தி..
இன்னும் கொஞ்சநேரம்
என்கையில் கண்சிமிட்டி
காணாமல் போகிறது..
உன் அச்சங்களை
அடுக்கிவைத்து...
உன் வழித்தோன்றல் தான்
இம்மழையோ..
#பருவமழை.
Comments
Post a Comment