நீயென பெய்யும் மழை...
ஒவ்வொரு மழை
கவிதையிலும்
உன் முத்தமே
வழிந்தோடுகிறது...
மழை நனைக்கும்
ஒவ்வொரு துளியும்..
உன் முத்தமாகவே
வழிந்தோடுகிறது..
மழையினால்
விளைந்த
முத்தமா...
உன் முத்தம்
தர காத்திருந்த
மழையா...
வருகையாய்..
மழையும்...
வருடலாய்
நின் முத்தமும்...
உன் முத்த
பொழுதுகளெல்லாம்
மழை சுமந்தபடி...
மழை நாட்களெல்லாம்
உன் முத்தம்
தின்றபடி...
எதனால்
எதுவென்று அறியாமல்
நனைந்திருக்கிறேன்..
உன் முத்த மழையில்...
Comments
Post a Comment