யாதுமாகி...
விழிகள் திறந்த
இமைகதவினை
அடைத்து
நிற்கும்
நதியாகி வழிந்து
கடக்கிறாய்...
இதயகூட்டின்
வாயில் உடைத்து
கசியும் அணுவில்
நுழைந்து மீண்டும்
கலைத்து மீள்கிறாய்..
வழியென
நீ சமைத்த
பாதை...
வலிகளை
சிதறி ஓட..
வரமென நான்
விரும்பிய உன்
காதல்...
நாளங்களை
வெடித்து தீர்க்க....
புலன்களில்
ஊடுருவிய உன் வெப்பம்...
உயிரினில்
எரிமலையாய்..
வழிய...
இதழ்களில்
நீ பருகிய
தேனூற்றில்...
புயலென
பூகம்பங்கள்
பூத்திட...
காதலாலே
வானே...வாடி நானும்
போனேன்...
மழையை
பொழிந்து
மறுகணமே...
வெள்ளகாடாய்
மூழ்கடித்து...
மூச்சை அடைக்கிறாய்...
தென்றலாக
எனை வருடி
சிலிர்த்து கிறங்கி நான்
கிடக்க...
புயலாய் கடக்கிறாய்...
மேகமெத்தை தான் தந்து
சுகமாய் நானும்
உறங்கி போக...
களைந்து
போகிறாய்....
எனை பிரிந்தும்
சிரிக்கிறாய்..
என் தேக சிதையில்
உயிரை தள்ளி
எரிந்து
கரைந்து
கலக்க வருகிறேன்...
வானே..
உன்னில் காற்றாய்...
Comments
Post a Comment