தேகபாடல்..
பனிமொட்டுகள் சிந்தும்
மழையில்...
உன் முத்தங்கள் சிதறி
கிடக்க...வா..
அந்தி சாயும் நேரம்...
மொட்டுகள் திறக்கும்
என் தேகம்...
மின்னல் பரவி
துடிக்கும் இதழ்கள் மூட..வா..
வாடைகாற்றின்
ஈரபாடல் ..
நனைந்த பூவின்
நடுக்கம் தீர்க்க வா..
அலையின் நடுவில்
விளையாடி
களித்த இரவை
காணாமல் தவிக்கும் பாவை
இவளின் அலைகளை
தர ...வா...
மலரின் மீது விளையாடி
வழிந்து சொறிந்த
மழையாக..
குளிர்ந்து கிடக்கிறேன்..
வெப்பம் தேடி
விழித்திருக்கிறேன்..
முதலும் முடிவும்
அறியாமல்
கவிதை படிக்கிறேன்..
நகச்சுவடு பதிக்கிறேன்..
காதலாலே
தீரும்
மோகம் கொன்று ...
உன்னை ஏந்தி காதல் காட்டை
நானும் கடக்கவா...
ஏழு ஜென்ம்ம் முடிந்தாலும்
தொடரும்
வரமாகிட...
உன்னை அணைத்து
முடியாமல்
உயிரும்
நழுவிட...
விழிகள் நனைந்த
கவியொன்றை
உன் மார்பில்
எழுதி மறித்திட...
வரமொன்று தாடா...
மலரின் தடமாய் வழிந்த மழையில்..
உன் பேரை எழுதி
பூத்திருக்கிறேன்...
உன்
முத்தங்கள் கோர்த்திருக்கிறேன்...
Comments
Post a Comment