தோல்வி?
காதலித்து
தோல்வியுற்றேன்...
என்பதாய்
பிதற்றி திரிபவர்களை
சிறு நகையுடன்
கடக்கிறேன்...
பேரன்பில்
நனைந்து திளைத்து
அணுக்களெல்லாம்
அசைபோடும்
வலியென்பது....
பிரசவ வலி போல்
சுகமானது...
பிள்ளைகளாய்..
நினைவுகளை
பெற்று
நிஜமாய் வாழ்ந்து
தீர்க்கையில்..
அது வெற்றியன்றி
வேறென்ன..??
Comments
Post a Comment