சுகம்..
நெருப்பென்று
விலகியிருந்தேன்...
இழுத்துகொண்டாய்
குளிர்ந்துபோனேன்..
மழையோ நீயென
நனைய வந்தேன்...
மூச்செடுக்க முடியாமல்
காற்றுப்பை அடைத்துப்போனேன்..
உனக்கான
எதிர்பார்ப்புகளில்...
எதிர்மறை யுத்தமாகவே
குழம்பிக்கிடக்கிறேன்...
என்னவாய்
இருந்தால் என்ன...
காதலால் நிறைந்திருக்கையில்...
உனக்கான எதுவும்
சுகமெனக்கு...
Comments
Post a Comment