நீ...
கரையாய்
உன்னைக்கட்டி
கிடக்க..
அலையாய்
சிறுமுத்தங்களில்
நனைக்கிறாய்...
வெளியாய்
உன்னைப்பார்த்து
கிடக்க...
மழையாய்
பெருமுத்தங்களில்
ஊடுருவுகிறாய்...
மேகமாய்
உன்னைத்தழுவி
கிடக்க...
காற்றாய்
பெருந்தழுவலில்
சிதறடிக்கிறாய்...
எண்ணத்தழுவல்களில்...
சிறைபிடிக்கிறேன்..
உன் மீதான
பிரியமுடிச்சுகளில்
வாழ்ந்துமுடிக்கிறேன்...
Comments
Post a Comment