மறந்தால் தானே...!

இதமாய்
கசிந்தாய்...
சுகமாய்
கலந்தேன்...

காற்றாய்
அசைத்தாய்..
கலமாய்
மிதந்தேன்...

காம்பு பற்றி
ஊஞ்சலாடும்
பூக்களாய்...
உன் நினைவின்
சுகங்கள் பற்றி
ஆடி களிக்கிறேன்...

பூக்காடு
கொண்ட வாசமாய்..
உன் சுவாத்தை...
பூசிக்கொண்டே
நகை பூசி
மிதக்கிறேன்..

அந்தி சிந்திய
வண்ணங்களாய்...
என்னில்
பரவிய முத்த பூச்சுகளில்...
சிவந்து திரிகிறேன்...

எங்கெங்கு
போனாலும்..
என் தேகம் தீண்டும்
காற்றாய்...
என்னை அரவணைத்தே
செல்லும் நின் நினைவு...

நொடிப்பொழுதும்
விலகிபோகா உன்
நினைவுகளை
சுமந்து திரியும்
என்னை கேட்கிறாய்...
என் நினைவே
இல்லையா என்று....

கனவுகளிலும்
நினைவினிலும்
கலந்த உன்னை
மறந்தால் தானே
நினைக்க....

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..