பேருந்து...
உனக்கான காத்திருப்புகளில்...
மணித்துளிகளை
தின்றுகொண்டும்...
நேற்றைய காத்திருப்பின்
நீழம் அளந்துகொண்டும்...
காத்திருப்பது
சுகமே எனக்கு...
உனக்காய் என்பதில்..
எப்போதும் போலவே
சிறிது தாமதித்தே
வந்து சேர்ந்தாய்..
ஒரு நாளேனும்
உனக்காய் செலவழிக்காமல்
முன் செல்லக்கூடாதாவென
கடிந்த அலுவலக தோழர்களிடம்
எப்படிச்சொல்லுவேன்...
என் காதலின்
ஒரே சின்னம்
நீ யென...
அவளும் நானுமாய்
உன்னைக்கீறி எழுதிய
பெயர்களும்..
உன் ஜன்னல் பட்டு
தெரித்த மழைக்காய்
என் நெஞ்சில் புதைந்து
கொண்ட அவள் வாசமும்..
அவளை நினைத்து
உன்னில் பயணிப்பதே
சுகமொனக்கு...
இந்த ஆயுளை
உன்னுடனே
வாழ்ந்துகொள்கிறேன்..
அருமை
ReplyDelete