பூக்காடு.

பூக்காடு..
அவள் தேகம்
ஒரு பூக்காடு...

தேன்கூடு
அவள் கண்ணகதுப்பு
ஒரு தேன்கூடு..

மொட்டு விரிந்த
மலராய்
இதழ் விரித்தாள்..

மகரந்த சூழ்
என்ன
தேனாறோ....

பருகிட பருகிட
தெவிட்டா
சுவையோ...

விழி பிண்ணிய
நூலம்படையில்
மானுடன்
இவனோ...

காற்றே வா...
விழி தாழ்
திற...

இம்சையடி...
உன் காதல்
தொல்லையடி...

இச்சை
கொண்டே
விழுந்து தொலைந்தேன்...

வானம்
சுற்றி பறந்து
திரிந்தேன்..

களவாடி
கட்டி வைத்தாயடி...

இமைக்காமல் பார்த்து
சிரித்தாய்..
இதழாலே தேன்மழை
பொழிந்தாய்...

சுகமாய்
சுகமாய்..
தருவாய்...
மறைவாய்..

மௌளன காட்டில்
தத்தளிக்கறேன்...
பூக்களுக்கும்
கட்டளையிடும்...
பூவரசி...

செல்லும் வழி கூறடி
வானம் பார்த்தே
நாளானது...

உன் தேகம்
ஒன்றே
நினைவானது...

மறந்துவிட
கூடாதென்று
மரணக்குழியில்
தள்ளி விட்டாய்..

வண்ண மலரே
வாசம்
பூசி திரும்புகிறேன்..
என் வாசலெங்கும்
உன் வாசம்...
என் உள்ளமெலாம்
உன் தேன்மழை...

வழி மறந்த கிறுக்கன்
நான்..
வந்த வழி மறக்க வைத்தாய்..
போகும் வழி
மறைத்து வைத்தாய்...

காதலென்று கொண்டேன்
கைதி யாக்கி
விட்டாய்
என்னை....

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..