கருவறை
ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பேன்..
பேசிய பேச்சுகளில்
செய்தி இருக்காது..
என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாது...
ஆனால்....
நீ சேகரிப்பாய்...
உன் நினைவடுக்குகளில்.
மூளை மடிப்புகளில்
எல்லாம் என் வார்த்தைகள்
சுமந்து கொண்டிருக்கும்...
நீ...என்
வார்த்தைகளின் கருவறை...
Comments
Post a Comment