கூடைக்காரி

வெம்மை பூசிக்கிடந்த
ஒரு உச்சிப்பொழுதில்
வியர்வை முத்துக்கள் மின்ன
கூடை சுமந்த அவளின்
வயதென்னவாய் இருக்கக்கூடும்..

தாகம் தேங்கி நின்ற
அவள் தொண்டை நனைக்க
கூடை நிறைந்த
ஆரஞ்சு சுளைகளை
சுவைக்கவுமில்லை...

தலைசுமை விட
மனபாரம் ஏறி
தெரிகிறது..முகத்தில்....
பிரசவ வரிகள்
வயிறு தாண்டி
தேகமெங்கும் படரி...

அவளுக்காய்
நான் என்ன செய்ய??..
அலைபேசினேன்...
பழமுதிர்நிலையத்திலிருந்து
வெறும் கையுடன்
வெளிவந்த
மனைவிக்கு கூடைக்கார
அம்மாவை
காட்டி நின்றேன்...!!

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..