வீடு

விண்ணை முட்டி நிற்கும் கண்ணாடி
கோட்டை...
மால் என்கிறார்கள்..
'மால்' இல்லாட்டி உள்ளே செல்ல முடியாதுதான்...
நுழைவாயிலில்
மறுக்கப்படுகிறேன்...
உடை காரணமோ..
தோற்றப்பிழை ...
காவலனைத்தாண்டி
மேயும் என்
கண்களில்....
பத்தாவது மாடி...
அங்கேதான் துணி
துவைக்கிறேன் என்று
என்னை துவைத்து
பிழிவாள்
என் கண்ணம்மா...
ஒவ்வொரு மாடியாய்...
படுக்கையறை
மாற்றி
கடைசி நாளில்....
மொட்டைமாடியில்
நிலா காய்ந்த
போது...
மச்சான்
நமக்குனு
ஊடு வேணும்..
எத்தினி கட்டடத்துல
வாழ்தாலும்...
நம்முதுனு...
ஜல்லியிலும்
சிமெண்டிலும்
புரண்டுகெண்டே இருக்கிறேன்...
கட்டிடங்களும்
மாறிக்கொண்டே...
கண்ணம்மா கேட்ட
குடிசைக்கு தான்
வக்கற்றுப்போனேன்...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..