மனிதம்.

எருவெரித்த
சாம்பலை
விபூதி
என
பூசிக்கொண்டு...

எச்சங்கள்
தெளித்த
அறுவடையில்
உணவும்
உண்டு...

எச்சில்தனிலே
உயிரும்
கொண்டு..

முகம்
சுழிக்கும்
முடிச்சினுள்
முகம்
துளைத்து
பிறவிஎடுத்து ...

உயிரொன்று போனதும்
உடலை
கழிவாய்
கருதி
முகம் திருப்பி
திரியும்
"'விந்தை மனிதன்...!'''

எச்சத்தின்
இழி பிறவி.

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..