சிவப்பு...
பவள மல்லியில்
சிவந்த
காம்புகளில்..
பிஞ்சு பாதம்
ஊடுருவிய
இரத்த
நாளங்களில்.
மொட்டுகள்
விரித்த
செங்காந்தள்
மலரில்..
அந்திசாயும்..
செந்தூர
வானில்....
சிவப்பும்
பிடித்தே இருந்தது...
புல்லின்
நுனியில்
பனித்துளி களைந்த
உதிர காடும்...
அள்ளி பருகும்
நீரோடை
சுமந்த இரத்த வெள்ளமும்..
வானை கிழித்த
சிவப்புப்
பொறிகளும்...
சிந்தை தொட்டு
நெஞ்சம்
பிழியும் வரை...
Comments
Post a Comment