சாலை..

தினம் தினம் நாம் கடக்கும் பாதை கூட ஆயிரம் கதைகளை கடந்து கொண்டிருக்கிறது.
நாம் சாலை கடக்கிறோம்.சாலை நம்மை கடக்கிறது.
நம்மை விட அதிகமாய் உணர்வுகள் சுமக்கும் சாலை ஒரு வழித்தடமாய் தோன்றவில்லை.எத்தனை குழந்தைகளின் நடை பழக்கிய பெருமை ..திருமண ஊர்வலங்களின் ஆர்பரிப்பு..கடந்து போன உயிரற்ற உடல்களின் மௌன காந்தல்..
விபத்துகள் சிந்திய கண்ணீர் துளிகள்..
பரபரப்பான அந்த சாலை புத்தாண்டு வாழ்த்துக்களாலும் கால்நடைகளின் கழிவுகளாலும் தீண்டப்பட்டு.
அழகிய மழை நாட்களின் இரவில் ரம்மியமாய் காட்சியளித்த அதே சாலை..
சில சமயம் வெறுமை பூசிக்கொண்டும் நிற்கிறது..
அதெல்லாம் அதன் உணர்வுகள் என்றே கண்டேன்..
என் மன ஓட்டத்தின் விருப்புகளும் வெறுப்புகளும் காட்சிப்பிழையே...
நமக்கான எண்ண செலுத்தல் களில் நமது புலனுணர்வு எதை கொள்கிறதோ அதுவே உண்மை என கொள்கிறோம்.அதுவே உண்மை என உறுதிபடுத்துகிறோம்.
உண்மையில் சாலை மட்டுமல்ல எதுவும் எவரும் வாய் விட்டு சொல்லாத இடங்களில் நமது உருவகங்கள் எல்லாம் நமது மன தோன்றலே..
நேரமறையாகவோ எதிர்மறையாகவோ நமது விருப்பங்களே எண்ணங்களாய் செயல்களாய்...
கடைசியில் நிஜமாகவும் ஆகி விடுகிறது.

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..