மழை..

ஆழ்ந்த துயிலில்..
மனதை துளைத்த மண் வாசனை..
சில்லென்ற சிலீரிடல்..
படபடவென்று செவி தீண்டிய ஓசை அது...தென்னங்கீற்றில்
பட்டுத்தெறித்த மழை..
கீற்றின் பல்லவியோ..
மழையின் முத்தமோ..
ஓயாமல் தட்டிய
சத்தத்தில்..
இனியும்..
சாத்தியமோ
என் உறக்கம்..

உச்சமாய் நான்
இடும்..முத்தங்கள் பெறும்...
மண்ணின் வெட்க பரவல்
பாராமல்...
உன் மிச்சத்துயிலை
தொடர்வாயா
என்றது மழை...

மண் மட்டுமல்ல
உன் முத்தங்கள் புசிக்கவே...
நானும்..
தவிக்கிறேன்..

நனைத்துவிடு
என்னை...
நகர்ந்துவிடாதே...
என்றேன்...

விழுந்தேன்..
மழையில்..
சிலிர்த்து..
ரசித்து ...
முகர்ந்து..

சில்லிட்டு...
சொட்ட சொட்ட நின்றேன்...

மிச்சமாய்..
சிதறிகொண்டே
இருந்து...
மழை...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..