உன் பிரிவு...

ஆடை
துளைத்து
சிலீரிடும்
சாரலை விடவும்...
சில்லிடுகிறது
நின்
தீண்டல்...

வாடைக்
காற்று
போல தான்...
உன் காதலும்...
வந்து போனதும்
நோவு
கொள்கிறது
என்
நெஞ்சம்...

கனவுகளாய்..
சில
நாட்களும்..
கைகோர்த்து
சில
நாட்களும்...

வரவினை
கழித்து விட்டு
செலவான
நாட்களை
எண்ணியபடி...

நீயில்லா
நாளில்...
பூஜையறை
ஏங்கியும்...
சமையலறை
பசித்தும்..

எதுவும்
செய்ய விழையா
மனம்...
உன்னை
சுமந்துகொண்டு...

இரவெல்லாம்
ஒலிக்கும்
இராகங்களில்
விடியலில்
சிவந்த
விழிகளில்...
நிறைந்து விடும்
உன்
நினைவுகள்..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..