நானாக...
ஜன்னலில் தெறித்த
துளிகளில்
ஈரமாய் நீ..
முந்தானை
பற்றி இழுத்த
தென்றலில்
உன் சாயல்..
பூஜைக்கு
பறித்த
மலர்களில்
உன்
வாசம்..
கடுகு
தெரித்த
காரமாய்
உன்
நக்க்கீறல்..
கோலத்தின்
புள்ளிகளை
மாற்றி
எனைக்
குழப்புகிறாய்...
நடந்துசென்ற
பாதையின்
திரும்பும் வழி
தொலைக்கிறேன்..
வழிபோக்கரெல்லாம்
நீயாய்
நிறைகிறாய்...
போய்தான் வாயேன்
சில நிமிடம்..
நானாக
வாழ்ந்துவிடுகிறேன்..
Comments
Post a Comment