ஒவ்வொரு மழை நாளிலும்..
வந்துவிடுகிறாய்...
நினைவடுக்கில்..
மென்மேலும் மழைநாட்களின்
பக்கங்கள் அதிகரித்தாலும்...
உள்ளிருந்து முளைவிட்டபடி...

இரவு மழையில்
நனைந்து சிலிர்த்த
என் அம்மா வைத்த
முல்லைக்கொடி
பூத்ததென்னவோ உனக்காக...
மொத்தமாக பறித்தால்
கண்டுகொள்வாளோ...
அளவாய் பறித்து
மழை ஈரம் உலர்த்தி ...
மழை வாசமோ மண்வாசமோ
என்றனை...
உன் வாசமென்றாய்...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..