Posts

Showing posts from July, 2017
ஆசைகள் உடைபடும் தருணங்கள் இருக்கவே செய்கிறது.. புதைத்து வைத்த ஆசைகள் பிராவகத்தின் போதும். விடாது பெய்யும் மழை நாட்களில்... அமிழ்த்து வைத்த என் சின்ன ஆசைகளில் பற்றி எரிகிறேன்... யாருமற்ற மலைபாதை.. கொட்டும் மழை.. குடையாய் வானம்.. ஆரவாரமற்ற அந்தி மழை நான் மட்டும் ஆர்பரித்து... பனிபுல்லின் நீர் பருகி... பச்சைபுல் பஞ்சனையில் தலைசாய்த்து.. மொழி அறியா பறவைக்கு பதில்கூறி.. முடியாத என் பயணம்... தனியே என் சுவாசம்.. இன்னும் இன்னும்... ஆசைகள் கொட்டி விட தான் அவகாசம் இல்லை...
உன் சிரிப்பில் தொலைந்தே என்நாட்கள் கழித்தேன்.. வழியெங்கும் நீ சிதற விட்ட வண்ணங்கள் பூசி நிறைந்து போனேன்..
உனக்கான வலிகள் களைய என்றும் நான் இருந்திருக்கிறேன்... எனக்கான வலிகள் கூற விளைகையில் காணாமல் போய் விடுகிறாய் மனதின் பக்கச்சுவரில் அமர்ந்து எனை பார்த்துக்கொண்டிருக்கும் உனக்கு சொல்லாமலே தெரிந்தும் விடுகிறது.. கேட்டால் உனகேதும் நேர்ந்தால் ஏனோ எனக்கும் என விடுகதையாய் விடை சொல்கிறாய்...
உதிர்ந்துவிடாமல் சேமித்த கண்ணீரின் ஈரமுடிச்சுக்குள்.. ஊமையாய் உலர்ந்து களைத்த நெஞ்சிற்குள்.. மூச்சு முட்ட களைந்த என் கனவு..
தப்பி பிழைத்த களை யாய்... ஒவ்வொரு முறையும்.. முளைத்துக்கொண்டிருக்கிறாய்..
கொட்டித்தீர்த்த மழை... முழுதும் நனைந்து விட்டேன்.. உள்ளே வேர்க்கிறது...

கிறுக்கல்

நீண்ட நெடும் பயணமொன்றின் இறுதி நாளில்.. ஏதோ பேச மறந்த தவிப்பு.. எனக்கு பிடிக்கும்.. என எவ்வளவோ சொல்லி இருக்கிறேன்.. உனக்கு என்ன பிடிக்கும்.. உனக்கு பிடித்த எல்லாவற்றையும் என்றாய்.
மனதின் சாயம் வெளுக்காத வரை யாவரும் அழகுதான்...

என்னைப்பற்றி

தமிழ் மண்ணில்பிறந்து தமிழ் சுவாசித்து தமிழ் பருகி தமிழ் ருசித்து.. இன்று பட்டினி கிடக்கும் தமிழச்சி..